Entertainment Film Fromhollywood 0712 01 1071201045_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2வது கணவரால் என் வாழ்க்கை அர்த்தமானது: ஹாலிவுட் நடிகை நிக்கோலஸ்!

Advertiesment
2வது கணவரால் என் வாழ்க்கை அர்த்தமானது: ஹாலிவுட் நடிகை நிக்கோலஸ்!
, சனி, 1 டிசம்பர் 2007 (17:36 IST)
என்னுடைய வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாற்றியதற்கு கணவரும், பாடகருமான கெய்த் உர்பன்தான் காரணம் என்று பிரபல ஹாலிவுட் நடிகை நிக்கோலஸ் கிட்மேன் கூறியுள்ளார்.
நாற்பது வயது நிரம்பிய ஆஸ்ட்ரேலியாவைச் சேர்ந்த நிக்கோலஸ் கிட்மேன் தனது 16 -வது வயதில் நடிக்கத் தொடங்கி 6 வருடங்களிலேயே உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து டாம் குருஸ்-வுடன் 1990 -ல் நடித்த டாஸ் ஆப் தண்டர் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். 11 ஆண்டுகள் மகிழ்ச்சியாக சென்ற மணவாழ்க்கை 2001 -ல் முறிந்தது.

அதனைத் தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளான நிக்கோலஸ் கிட்மேன் சில காலம் நடிக்காமல் இருந்தார். பின்னர் மனஅழுத்தத்தில் இருந்து மீள்வதற்காக மீண்டும் நடிக்கத் தொடங்கினார். அதனைத் தொடர்ந்து 2006 -ம் ஆண்டில் ஆஸ்ட்ரேலிய பாடகர் கெய்த் உர்பனை சந்தித்து பின்னர் அவரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.

கொஞ்ச காலத்திற்கு முன்பு உலகில் நான் வாழ்வதில் விருப்பமின்றி இருந்தேன். எங்காவது தொலைந்து போய்விட வேண்டும் என்றெல்லாம் நினைத்தது உண்டு என்று கூறியுள்ள நடிகை நிக்கோலஸ் கிட்மேன், ஆஸ்ட்ரேலிய பாடகர் கெய்த் உர்பனை சந்தித்த பின்னர் தான் என் வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொண்டேன் என்றும், நான் தற்போது உயிரோடு இருப்பதற்கு ஒரே காரணம் கெய்த் தான் என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil