ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி கெய்லி மினனோகீயூ மே மாதம் ஐரோப்பிய நாடுகளில் தனது கலை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.
சிங்கிள்-2 ஹார்ட்ஸ் பாப் ஆல்பம் மிகப்பெரிய வெற்றியடைந்ததைத் தொடர்ந்து பிரபல பாப் பாடகி கெய்லி மினனோகீயூ மீண்டும் பாப் பாடகிகளின் வரிசையில் முதல் 10 இடத்திற்குள் வந்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ளவிருக்கும் கலைநிகழ்ச்சிகளுக்கான அறிவிப்பை வெளியீட்டுள்ளார்.மொத்தம் 24 நாட்கள் ஜெர்மனி, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கெய்லி நடத்த உள்ள கலை நிகழ்ச்சி வரும் மே 6 -ம் தேதி பாரீஸில் தொடங்குகிறது.
அதனைத் தொடர்ந்து கெய்லி ஜீன் மாதம் 2 இரவுகள் இங்கிலாந்தில் உள்ள அரினாவில் நடத்த உள்ள கலைநிகழ்ச்சிகளில் அவருடைய சமீபத்திய பாடல்கள் அதிகம் இடம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சிகள் இருக்கும் என்று 39 வயதான கெய்லி கூறியுள்ளார்.
கடந்த 2005 -ம் ஆண்டு கெய்லி மினனோகீயூ ஐரோப்பிய நாடுகளில் மேற்கொள்ள இருந்த பயணம், அவருக்கு மார்பு புற்று நோய் உள்ளது கண்டுபிடிக்கப் பட்டதைத் தொடர்ந்து இரத்து செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கெய்லிக்கு சிகிச்சை அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பரில் சிட்னியில் நடைப்பெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதனனயடுத்து கடந்த ஜனவரி மாதம் மூச்சுத் திணறல் காரணமாக மான்செஸ்டரில் நடைபெற இருந்த அரண்டு நிகழ்ச்சிகள் இரத்தானது.பின்னர் இந்நிகழ்ச்சிகள் வேறு நாட்களில் நடத்தப்பட்டது.
கடந்த திங்கட்கிழமை கெய்லி மினனோகீயூவின் டென்த் ஆல்பம் வெள்யிடப்பட்டது. கெய்லியின் ஐரோப்பிய கலை நிகழ்ச்சிகளுக்கான நுழைவுச் சீட்டுகள் விற்பனை டிசம்பர் 3 -ம் தேதி முதல் தொடங்குகிறது.