Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய படத்தில் பாப் பாடகி ஜேனட் ஜாக்சன்!

Advertiesment
புதிய படத்தில் பாப் பாடகி ஜேனட் ஜாக்சன்!

Webdunia

, புதன், 28 நவம்பர் 2007 (16:19 IST)
webdunia photoFILE
சர்வதேச அளவில் பாப் ரசிகர்களின் மத்தியில் தனக்கென்று தனி இடத்தைப் பெற்றுள்ள பிரபல பாப் பாடகி ஜேனட் ஜாக்சன் டபிள்யு.எம்.ஏ நிறுவனத்தின் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒய் டிட் ஐ கெட் மேரிட் - என்ற டெய்லர் பெரிஸ் இயக்கத்தில் தான் நடித்த படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ஜேனட் ஜாக்சன் இப்படத்தில் நடிக்க சம்மதித்ததாக கூறப்படுகிறது. டபிள்யு.எம்.ஏ நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ஜேனட் ஜாக்சனை வற்புறுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

டபிள்யு.எம்.ஏ நிறுவனம் திரைத்துறை, சுற்றுலா, உரிமம், வணிகம், தொலைக்காட்சி, திரையரங்குகள், அச்சகத்தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான டேவ் விர்ட்ஷாப்டர், நாம் வாழும் காலத்தில் வாழும் பிரபலமான பாப் பாடகர் ஜேனட் ஜாக்சன் என்றும், அப்படிப்பட்டவர் தங்கள் நிறுவனத்தின் திரைப்படத்தில் நடிக்க சம்மதித்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். இந்த நிறுவனத்தின் நீண்டகால வரலாறு ஜேனட் ஜாக்சனை மிகவும் கவர்ந்ததால் தான் அவர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil