Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒரே படத்திற்கு ரூ.50 கோடி! ஜெட் லீ சாதனை!

Advertiesment
ஒரே படத்திற்கு ரூ.50 கோடி! ஜெட் லீ சாதனை!

Webdunia

, செவ்வாய், 27 நவம்பர் 2007 (15:10 IST)
webdunia photoFILE
புரூஸ் லீ, ஜாக்கி சான் ஆகியோரின் வரிசையில் அதிரடி படங்களில் நடித்து புகழ்பெற்று வரும் சீன நடிகர் ஜெட் லீ, வார் லார்ட்ஸ் என்ற படத்தில் நடிப்பதற்கு 100 மில்லியன் யுவான் சம்பளம் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்!

2002 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டு வெளியான ஹீரோ என்ற படத்தில் 70 மில்லியன் யுவான் (4.6 பவுண்டு) சாதனை நிகழ்த்திய ஜெட் லீ, தற்பொழுது மேலும் 30 மில்லியன் அதிகம் பெற்று நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பீட்டர் சான் இயக்கும் வார் லார்ட் திரைப்படம் 300 மில்லியன் யுவான் செலவில் சீன மொழியில் எடுக்கப்படுகிறது. படம் எடுத்து ஆகும் மொத்தச் செலவில் 3ல் ஒரு பங்கு ஜெட் லீக்கு சம்பளமாக அளிக்கப்பட்டுள்ளது.

ஜெட் லீயைப் போன்ற ஒரு நடிகர் இல்லாவிட்டால், இவ்வளவு அதிகமான நிதிச் செலவில் சீன திரைப்படம் ஒன்றை எடுக்கத் துணிந்திருக்க மாட்டோம் என்று திரைப்படத்தின் இயக்குநர் பீட்டர் சான் தெரிவித்ததாக சீனத்தின் ஜிங் குவா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஹாங் காங்கின் குஙஃபூ சாம்பியனாக உயர்ந்த ஜெட் லீ நடித்த பல படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதையடுத்து, ஹாலிவுட்டிற்குச் சென்று லெத்தல் வெப்பன்-4, கிஸ் ·ப் த டிராகன் ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

தற்பொழுது மம்மி-3 என்ற படத்தில் மறுபிறவி எடுத்த சீன பேரரசராக ஜெட் லீ நடிக்கின்றார். வார் லார்ட்ஸ் திரைப்படம் டிசம்பரில் வெளியாகிறது.

Share this Story:

Follow Webdunia tamil