Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமெரிக்க திரைப்படங்கள் குழந்தைத் தனமாக உள்ளன

அமெரிக்க திரைப்படங்கள் குழந்தைத் தனமாக உள்ளன

Webdunia

, சனி, 22 செப்டம்பர் 2007 (12:20 IST)
தற்போது எடுக்கப்படும் அமெரிக்கத் திரைப்படங்கள் குழந்தைத் தனமாக உள்ளன என்று ஸ்பெயின் நாட்டு திரைப்பட இயக்குனர் பெட்ரோ அல்மொடோவர் விமர்சித்துள்ளார்.

உலகம் முழுதுமே திரைப்படத்தின் தரம் குறைந்து விட்டதாகக் கூறும் இவர் அமெரிக்க திரைப்படங்கள் தர அளவில் மலிவாகிவிட்டதாக கடுமையாக விமர்சனம் செய்தார். உலக அளவில் படைப்புத் தளத்தில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க திரைப்படங்கள் தர அளவில் வீழ்ச்சியடைந்து விட்டது என்கிறார் இவர்.

ஐரோப்பாவில் தற்போது எங்குமே திரைப்படம் எடுக்க முடியாது, ஏனெனில் அங்கு பொதுவாக ஒரு படைப்பு நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று கூறும் அல்மொடோவர், படைப்புத் தன்மையில் அமெரிக்க படங்களில் குறைவில்லை என்றாலும் தரம் என்ற அளவில் 1960களில் எடுக்கப்பட்ட திரைப்படங்களுக்கு அருகில் கூட நிற்கவில்லை என்கிறார் இவர்,

இந்த தர வீழ்ச்சிக்கு திரைப்பட தயாரிப்பாளர்களே காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

புதிய அமெரிக்க திரைப்படங்கள் குழந்தைகளின் எலக்ட்ரானிக் பொம்மை விளையாட்டு போல் உள்ளது என்று மட்டம் தட்டியுள்ளார். 1970களுக்கு முந்தைய திரைப்படங்களில் உள்ள ஒரு அபாய உணர்வு இப்போதைய படங்களில் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil