Entertainment Film Fromhollywood 0708 22 1070822011_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹாரி போட்டர் சாகச நாயகனுக்கு பைக் ஓட்டத் தெரியாது!

Advertiesment
ஹாரி போட்டர் டேனியல் ராட்கிளிஃப்

Webdunia

, புதன், 22 ஆகஸ்ட் 2007 (13:54 IST)
ஹாரி போட்டர் திரைப்படத்தில் தனது வியக்கவைக்கும் சாகசங்களால் குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நட்சத்திர நாயகன் டேனியல் ராட்கிளிஃப்பிற்கு பைக் ஓட்டத் தெரியாது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம்! அது உண்மைதான்!

பிரிட்டிஷ் தொலைக்காட்சி நாடகம் ஒன்றில் தற்போது ராட்கிளிஃப் நடித்து வருகிறார். அந்த நாடகத்தின் பெயர் "மை பாய் ஜேக்". இதில் இவர் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு மோட்டார் பைக் ஓட்டத் தெரிந்திருப்பது அவசியம்.

மோட்டார் பைக்கை எப்படி இயக்குவது என்று கூட தனக்கு தெரியாது என்று ராட்கிளிஃப் கையை விரிக்க, அந்த நாடக தயாரிப்பாளர்கள் வேறு வழியின்றி ஸ்டன்ட் நடிகர் ஒருவரை வைத்து டூப் போட்டு அந்த காட்சிகளை எடுக்க வேண்டியதாயிற்று.

அதாவது நாம் அந்த காலப் படங்களில் பார்ப்போமே அதுபோல் டேனியல் ராட்கிளிப் பைக் ஓடாத நிலையில் அதில் அமர்ந்து ஓட்டுவது போல் பாவனை செய்தால் போதுமானது, மீதியை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். (ஏ.என்.ஐ.)

Share this Story:

Follow Webdunia tamil