மது அருந்திவிட்டு கார் ஓட்டிய குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டு லாஸ் ஏஞ்சலஸ் சிறையில் அடைக்கப்பட்ட ஹாலிவுட் நடிகை பாரிஸ் ஹில்டனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை வீட்டுச் சிறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
கடந்த 3 நாட்களாக சிறையில் இருந்த பாரிஸ் ஹில்டனின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்று நீதிமன்றத்திற்குத் தெரிவித்ததையடுத்து, அவரை அவருடைய வீட்டிலேயே சிறை வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
வீட்டுக் கொண்டு செல்லப்பட்ட பாரிஸ் ஹில்டன், நாளை காலை 9 மணிக்கு நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக நீதிமன்ற பேச்சாளர் ஆலன் பராச்சினி கூறினார்.