மீண்டும் இரும்பு குதிரையில் லட்சுமி ராய்
Publish Date: Thu, 27 Mar 2014 (10:36 IST)
Updated Date: Thu, 27 Mar 2014 (10:35 IST)
அதர்வா, ப்ரியா ஆனந்த் நடிக்கும் இரும்பு குதிரையில் மீண்டும் லட்சுமி ராய் சேர்க்கப்பட்டுள்ளார். படத்தில் அவர் பைக் ரேஸராக வருவது குறிப்பிடத்தக்கது.
இரும்பு குதிரையை யுவராஜ் இயக்குகிறார். பைக் ரேஸை மையப்படுத்திய கதை. பைக் ரேஸராக அதர்வா. இந்தப் படத்தில் லட்சுமி ராயும் பைக் ரேஸராக நடிப்பதாக கூறப்பட்டது. இதற்காக ரேஸ் பைக்குகளை ஓட்டி லட்சுமி ராய் பயிற்சி எடுத்துக் கொண்டார்.
படப்பிடிப்பு தொடங்கி பல வாரங்கள் கழிந்த பிறகும் இயக்குனர் தரப்பிலிருந்து லட்சுமி ராய்க்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் இரும்பு குதிரையில் நான் நடிக்கவில்லை என்று அறிவித்தார் லட்சுமி ராய். அந்தப் பிரச்சனை அனைவர் மனதிலிருந்தும் மறைந்து போன நிலையில் மீண்டும் பந்தய குதிரையும், லட்சுமி ராயும் ராசியாகியுள்ளனர்.