குடியரசு தினத்தில் மூன்று படங்கள்
, செவ்வாய், 21 ஜனவரி 2014 (16:32 IST)
குடியரசு தினமான ஜான்வரி 26 மூன்று படங்கள் வெளியாகின்றன.
2014
இரண்டு ஹிட்களுடன் தொடங்கியிருக்கிறது. டப்பா படம் என்றுதான் தி இந்து உள்ளிட்ட பத்திரிகைகள் ஜில்லாவையும், வீரத்தையும் கழுவி ஊற்றின. ஆனால் அவர்களுக்கும் பொதுஜன ரசனைக்கும் நடுவே கிலோ மீட்டர் நீளம். இரண்டு படங்களும் போட்ட முதலைவிட அதிகம் வசூலித்து, சம்பந்தப்பட்டவர்கள் இரண்டு மூன்று சக்சஸ் பார்ட்டிகளும் வைத்துவிட்டனர். இந்த வருடம் எப்படி அமையும் என்பதை உண்மையில் தீர்மானிக்க இருப்பது ஜான்வரி 26 வெளியாகவிருக்கும் மூன்று படங்கள். இதில் விசேஷம் எந்த முன்னணி நடிகரும் இந்தப் படத்தில் இல்லை. அதேபோல் இயக்குனரும்.