இளையராஜா பத்திரிகையாளர் சந்திப்பு - படங்கள்
, செவ்வாய், 21 ஜனவரி 2014 (13:59 IST)
இளையராஜா நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து தனது புகைப்பட கண்காட்சி குறித்து பேசினார்.
இளையராஜா சிறந்த புகைப்பட கலைஞர். இசை தவிர்த்து அவர் ஈடுபாடு காட்டும் ஒரே துறை இது. பலருக்கும் தெரியாத இந்த ரகசியம் கடந்த 15ஆம் தேதி வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. தான் இதுவரை எடுத்த புகைப்படங்களில் சிறந்தவற்றை நான் பார்த்தபடி என்ற பெயரில் கண்காட்சியாக வைத்துள்ளார். கமல்ஹாசன் திறந்து வைத்த இந்த புகைப்பட கண்காட்சி நாளைவரை நடைபெற இருக்கிறது.