Publish Date: Mon, 20 Dec 2010 (20:17 IST)
Updated Date: Mon, 20 Dec 2010 (20:17 IST)
விஜயகாந்தின் அரசியல் விளம்பரங்களில் எல்லாம் தவறாமல் இடம் பிடித்துவிடுகிறார் மக்கள் தலைவர் எம்ஜிஆர். கேப்டன் தொலைக்காட்சியில் எம்ஜிஆர் அப்படியே விஜயகாந்தாக மாறும் கிராஃபிக்ஸ் கலக்கல்களும் உண்டு. ஆனால் இது விருதகிரி விளம்பரம் பற்றியது.
முந்தையப் படங்களை ஒப்பிடுகையில் விருதகிரி அப்படியொன்றும் மாபெரும் தோல்விப்படமல்ல. சில இடங்களில் லாபம்கூட சம்பாதித்துக் கொடுத்திருக்கிறதாம். இந்தப் படத்தின் சுவரொட்டி விளம்பரங்களில் புரட்சித் தலைவருக்கு உலகம் சுற்றும் வாலிபன், புரட்சிக் கலைஞருக்கு விருதகிரி என இரண்டு பேரின் படங்களையும் பிரசுரித்திருக்கிறார்கள். கேப்டனின் கட்டளையாம்.
விஜயகாந்த் பேசாமல் எம்ஜிஆரின் படங்களின் ரைட்ஸ் வாங்கி ரீமேக் செய்யலாம். படமும் ஓடும்.