Publish Date: Thu, 26 Aug 2010 (16:42 IST)
Updated Date: Thu, 26 Aug 2010 (16:41 IST)
ஸ்ரீகாந்த், விஷ்ணு நடித்திருக்கும் துரோகி செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது.
மணிரத்னத்தின் அசிஸ்டெண்ட் நந்தினி இயக்கியிருக்கும் ஆக்சன் படம் துரோகி. வழக்கமாக பெண் இயக்குனர் காதல், காமெடி என்று சாஃப்டான கதைகளைதான் படமாக்குவார்கள். நந்தினியின் முதல் படமே ஆக்சன் பின்னணியில் உருவாகியிருக்கிறது.
படத்தின் ஸ்கிரிப்டைப் படித்த விஷ்ணு இம்ப்ரஸானதே அதில் வரும் மானாவாரியான கெட்ட வார்த்தைகளுக்காகத்தானாம். பூர்ணா, பூனம் பஜ்வா நடித்திருக்கும் இந்தப் படத்தில் பூஜாவும் நடித்துள்ளார்.
செப்டம்பர் 10 துரோகியை திரையில் ரசிக்கலாம்.