சங்கங்களின் தடையை மீறி படப்பிடிப்புக்காக இலங்கை சென்ற அசின், நடிகையாக இல்லாமல் இலங்கையின் கலாச்சார தூதுவரைப் போல் செயல்பட்டு தமிழர் விரோதப் போக்கை கடைபிடித்து வருகிறார்.
தடையை மீறி இலங்கை சென்றது குறித்து கேட்டதற்கு, நான் வெறும் நடிகை, தயாரிப்பாளரும், இயக்குனரும் சொல்வதைத்தான் நான் செய்ய முடியும். லொகேஷனை மாற்றுவதற்கான அதிகாரம் எல்லாம் என்னிடம் இல்லை என பூசி மொழுகிப் பேசிய இந்த மலபார் நடிகை, இலங்கையில் படப்பிடிப்பில் மட்டுமின்றி பாசிஸ ராஜபக்சேயின் மனைவி செல்லும் விழாக்களுக்கெல்லாம் அந்நாட்டு நல்லெண்ண தூதுவரைப் போல் கூடவே செல்கிறார்.
இலங்கைக்கு தினமும் விமானத்தில் பல நூறு பேர் தமிழ்நாட்டிலிருந்து செல்வதில்லையா என கேள்வி எழுப்பியிருந்தார் இந்த நடிகை. ஆனால் அப்படி செல்லும் யாரும் தமிழ் விரோதி ராஜபக்சேயின் அடிவருடிகளைப் போல் வெளிப்படையாக நடந்து கொள்வதில்லை என்பதை வசதியாக மறந்துவிட்டார்.
மருத்துவமனைகளில் இருப்பவர்களைப் பார்த்து ஆறுதல் சொன்னேன் என்று சொல்லும் இவரைப் போன்ற மனித விரோத கும்பல்கள், தங்களுடன் வரும் ராஜபக்சேயின் குலக் கொழுந்துகளிடம், இவர்களை மருத்துவமனைக்கு வரச் செய்தது யார்? இவர்களின் ஆயிரக்கணக்கான சொந்தங்களை தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வைத்து கொன்றுக் குவித்தது யார் என்றெல்லாம் கேள்வி எழுப்புவதில்லை.
ஓநாயை எதிர்க்க துணியாமல் அதற்கு ஒத்தடம் கொடுக்கும் யாரையும் மனித குலம் நம்பப் போவதில்லை.