Entertainment Film Featuresorarticles 0902 28 1090228058_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வறுத்தெடுத்த கங்கை அமரன்

Advertiesment
நாகேஷ் புகழஞ்சலி கங்கை அமரன் பத்மஸ்ரீ
அண்மையில் பிரியாவிஷன் சார்பில் நாகேஷுக்கு புகழஞ்சலி செய்யும் விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.எம். வீரப்பன். எஸ்.வி. சேகர், ராதாரவி உ‌ட்பட பல‌ர் கலந்துகொண்டு நாகேஷின் பெருமைகளை, சாதனைகளை நினைவு கூறினர்.

இவ்விழாவில் கங்கை அமரனும் பங்குபெற்றிருந்தார். எல்லோரும் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கையில் கங்கை அமரன் மட்டும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. தனது பேச்சில் பத்மஸ்ரீ பட்டம் பற்றியும், அது தருகிற அமைப்பை பற்றியும் விளாசித் தள்ளிவிட்டார்.

"நாகேஷ் மிகப்பெரிய கலைஞன், அவருக்கு பத்மஸ்ரீ கொடுக்கவில்லை. யார் யாருக்கோ கொடுக்கிறார்கள். பத்மஸ்ரீ பட்டம் கொடுக்கும் அந்த அமைப்பில் பணத்தை வாங்கிக் கொண்டு பட்டத்தை விற்கிறார்கள்.

சிறந்த நகைச்சுவை நடிகர் என்பதற்கான பட்டம் பெற்றுள்ள விவேக், நாகேஷுக்கு கொடுக்காத பத்மஸ்ரீ எனக்கு வேண்டாம் என்று தூக்கி வீச வேண்டும். அப்படி செய்தால் விவேக்கிற்கு என் தலைமையில் விழா எடுப்பேன்." என பொரிந்து தள்ளிவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil