Publish Date: Tue, 10 Feb 2009 (15:40 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:39 IST)
பொதுவாக ரீமிக்ஸை விரும்புகிறவர் அல்ல இயக்குனர் சாமி. விதிவிலக்காக அவரது சரித்திரம் படத்தில் ஒரு ரீமிக்ஸ் இடம்பெறுகிறது.
ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த உரிமைக்குரல் பாடலான, பொண்ணா பொறந்தா ஆம்பளைகிட்ட கழுத்தை நீட்டிக்கணும்... சரித்திரத்தில் ரீமிக்ஸ் செய்யப்பட்டுள்ளது.
இது முழுமையான ரீமிக்ஸ் அல்ல. பாடலின் டியூனுக்கு வேறு வார்த்தைகள் போட்டிருக்கிறார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார். ஒரிஜினலில் ஆண் குரல் மட்டும் ஒலிக்கும். இதில் ஆண், பெண் இருவரும் பாடும் டூயட்டாக மாற்றியிருக்கிறார்கள்.
ஆதி, ஸ்ரீதேவிகா நடித்த இந்தப் பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது.