Publish Date: Tue, 10 Feb 2009 (14:18 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (20:39 IST)
இரண்டு படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார் பாலா. ஆச்சார்யா ரவி, சிங்கப்புலி இந்தப் படங்களை இயக்குகிறார்கள். இவர்கள் தனியாக படம் இயக்கியிருந்தும் நான் கடவுளில் பாலாவிடம்; பணிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
பாலா படம் தயாரிப்பதற்காகவே ஒருவர் காத்திருக்கிறார். பிதாமகனால் எனக்கு நஷ்டம் என்று கூறி கோர்ட்டுக்கு சென்ற தயாரிப்பாளர் வி.ஏ. துரைதான் அவர்.
பாலா தனது பி ஸ்டுடியோஸ் சார்பில் மாயாவி படத்தை தயாரித்தபோது பிதாமகன் நஷ்டஈடு கேட்டு துரை நீதிமன்றம் சென்றார். இதனைத் தொடர்ந்து, மாயாவி படத்தை நான் தயாரிக்கவில்லை, நான் வெறும் புரொடக்சன் மேனேஜர்தான் என ஜகா வாங்கினார் பாலா.
இப்போது பாலா மீண்டும் படம் தயாரிக்கும் முஸ்தீபுகளில் இறங்கியிருப்பதால் நீதிமன்றத்துக்கு செல்ல சுறுசுறுப்பாகி வருகிறார் துரை.
எதுவோ காலைச் சுற்றிய கதைதான் நினைவுக்கு வருகிறது.