ஏவி.எம். தயாரிப்பில் வெளிவந்த பழைய படங்களின் பெயர்களை சகட்டுமேனிக்கு அனைவரும் வைப்பதால், ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது அந்நிறுவனம்.
பழையப் படத்தை ரீமேக் செய்யும்பட்சத்தில் அதே பெயரை வைப்பது. இல்லாவிடில் பழைய பெயரை யாருக்கும் தாரைவார்க்காமல் இருப்பது. இந்த புதிய முடிவின்படி பழைய பெயரை பயன்படுத்த அனுமதி கேட்ட பலருக்கும் நோ சொல்லியிருக்கிறது ஏவி.எம்.
மேஜர் ரவி இயக்கத்தில் அர்ஜுன் நடிக்கும் படத்துக்கு அதே கண்கள் என்று பெயர் வைத்திருந்தனர். அதே கண்கள் ஏவி.எம். தயாரிப்பில் அசோகன் நடித்த படம். ஆகவே முறைப்படி, அனுமதி கேட்டு ஏவிஎம்மை அணுகினார், தயாரிப்பாளர் எஸ்.என். ராஜா. ஆனால், புதிய தீர்மானத்தின்படி அனுமதி அளிக்க ஏவி.எம். மறுத்துவிட்டது.
நம்மாட்கள் விடாக்கண்டனுக்கு கொடாக்கண்டன்கள். அதே கண்கள் என்றுதானே வைக்கக் கூடாது... அதே விழிகள் என்று வைத்துவிட்டுப் போகிறோம் என்று பெயரை மாற்றி வைத்துள்ளனர்.
படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பை மலேசியாவில் நடத்துகின்றனர்.