ஒரு படம் வெளிவந்தால் இரண்டு வருடம் ஓய்வு என்பது பாலாவின் கணக்கு. இந்தப் பதுங்கல் இல்லாமல் இந்தமுறை பாயத் தயாராகிறார் பாலா.
நான் கடவுள் படத்துக்கு மூன்று வருடங்கள் ஆனதுபோல் அடுத்தப் படத்துக்கு அதிக காலம் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறாராம் பாலா. அதாவது அடுத்த ஆறு மாதத்தில் படப்பிடிப்புக்கு கிளம்பி ஒரே வருடத்தில் படத்தை வெளியிடுவது திட்டம்.
நடக்கிற காரியமா இது என்று சிலர் கிளறிவிட்டாலும், நடந்தால் நல்லதுதானே என பலர் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். எப்போதும்போல இறுதி முடிவு பாலாவிடம்தான் இருக்கிறது.