Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கஞ்சா கருப்பின் பாலா அமீர் இல்லம்

Advertiesment
கஞ்சா கருப்பின் பாலா அமீர் இல்லம்
, சனி, 7 பிப்ரவரி 2009 (15:19 IST)
பெயர்தான் கருப்பு. உள்ளம் சலவைக்குப் போட்ட வெளுப்பு. நன்றிக்கு அர்த்தம் அழிந்து கொண்டிருக்கும் திரையுலகில் நன்றியின் முழு உருவமாக ஆச்ச‌ரியப்படுத்துகிறார், நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு.

தனது அலுவலகத்தில் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்த கஞ்சா கருப்பை பிதாமகனில் நடிகராக்கினார் பாலா. சின்ன வேடம்தான். ஆனாலும், அந்த சில நொடிதான் சிகரத்தின் முதல்படி. இரண்டாவது படி, அமீர். ராமில் படம் நெடுக வரும் வேடம் கொடுத்து பிரபலமாக்கியவர் அவர்தான்.

அந்த நன்றியை மறக்கவில்லை, கஞ்சா கருப்பு. புதிதாக வாங்கியிருக்கும் வீட்டிற்கு கஞ்சா கருப்பு வைத்திருக்கும் பெயர் பாலா - அமீர் இல்லம்.

வீடு வாங்கியாச்சு. அடுத்து திருமணம்தானே? கருப்புக்கு மணமகள் தகைந்து விட்டதாம். ஊ‌ரி‌லிருக்கும் உறவுக்காரப் பெண்ணாம். திருமணம் நடக்க இருப்பதால்தான் வீடே வாங்கியிருக்கிறார்.

தலைமை யார்.. பாலாவும், அமீரும்தானே?

Share this Story:

Follow Webdunia tamil