Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வசூ‌‌லி‌ல் டாப் 5 படங்கள்

Advertiesment
வசூ‌‌லி‌ல் டாப் 5 படங்கள்
, சனி, 7 பிப்ரவரி 2009 (15:16 IST)
இந்த வருடம் சோம்பலுடன் தொடங்கியிருக்கிறது. ூப்பர் ஹிட் எதுவும் இதுவரை இல்லை. நான் கடவுள்தான் ஒரே நம்பிக்கை. பொங்கல் படங்களில் படிக்காதவனுக்கே முதலிடம். தளபதிக்கு அதே இரண்டாவது இடம்.

5. காதல்னா சும்மா இல்ல
இரண்டு வாரங்கள் முடிவில் சென்னையில் 37 லட்சங்கள் வசூலித்துள்ளது. சென்றவார வசூல் நான்கு லட்சங்களுக்கும் கீழ். தோல்வியின் விளிம்பில் தத்தளிக்கிறது ரா‌ஜ் டிவியின் முதல் தயா‌ரிப்பு.

4. அபியும் நானும்
ஆறாவது வாரத்தில் நான்காவது இடம். சென்றவார வசூல் ஏறக்குறைய ஐந்து லட்சங்கள். இதுவரை 1.35 கோடி வசூலித்திருந்தாலும், படத்தின் தரத்துடன் ஒப்பிடுகையில் மிகக் குறைவு.

3. வெண்ணிலா கபடிகுழு
பிரபலங்கள் யாருமின்றி வெளியான முதல் மூன்று நாட்களில் பத்து லட்சங்கள் வசூலித்திருக்கிறது சுசீந்திரனின் இந்தப் படம். விமர்சன தி‌ரியாக பேசப்படுவதால் வரும் நாட்களில் வசூல் அதிக‌ரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2. வில்லு
சென்றவாரம் இருபது லட்சங்கள் வசூலித்திருக்கிறது வில்லு. படத்தின் பட்ஜெட்டுடனும், விஜய்யின் ஸ்டார் வேல்யூவுடனும் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு. இதுவரை சென்னையில் 2.2 கோடி மட்டுமே இப்படம் வசூலித்திருப்பது கவலைதரும் விஷயம்.

படிக்காதவன்
விளம்பரத்தின் அத்தனை அனுகூலமும் படிக்காதவனுக்கு சித்தித்திருக்கிறது. சென்றவாரம் 28 லட்சங்கள் வசூலித்த இந்தப் படம் இதுவரை 2.4 கோடிகளை தனதாக்கியிருக்கிறது. மூன்று வாரங்களில் என்பது குறிப்பிட வேண்டிய விஷயம்.

Share this Story:

Follow Webdunia tamil