முப்பத்தியெட்டு வருடங்களுக்கு முன் நாகிரெட்டி தயாரிப்பில் உருவான படம், நம்நாடு. ஏம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்த இந்தப் படத்தை ரீ மேக் செய்யும் பணி தொடங்கியுள்ளது.
நாகிரெட்டியின் மகன் வெங்கட்ராமரெட்டி விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் படங்களை தயாரித்து வருகிறார். இவரது தயாரிப்பில் வெளிவந்த தாமிரபரணி, படிக்காதவன் இரண்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
நம்நாடு படத்தை ரீ மேக் செய்ய இருப்பதாக தெரிவித்த அவர், நடிகர்கள் தேர்வு இன்னும் முடியவில்லை என்றார். படத்தை யார் இயக்குவது என்பது பரிசீலனையில் உள்ளது.
நம்நாடு என்ற பெயரில் ஏற்கனவே வேறு படம் வெளிவந்துள்ளதால், நம்நாடு மேக்குக்கு நல்ல புதுப் பெயராக தேடி வருகிறார்கள்.