ஷங்கரின் தயாரிப்பில் உருவாகிவரும் ரெட்டச்சுழியில் ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெறுகிறது.
ரெட்டச்சுழியின் முதல் ஷெட்யூல்டை நெல்லையில் முடித்த இயக்குனர் தாமிரா இரண்டாவது ஷெட்யூல்டுக்காக அதே நெல்லையில் முகாமிட்டுள்ளார். படத்தின் பிரதான நடிகர்கள் பாரதிராஜா, பாலச்சந்தர் இன்னும் சில நாட்களில் ஷுட்டிங்கில் கலந்து கொள்கிறார்கள்.
ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. இதற்காக கலை இயக்குனர் ஆரோக்கியராஜ் ராணுவ முகாம் போன்ற அரங்குகளை நெல்லையில் அமைத்து வருகிறார்.
தமிழ் சினிமாவுக்கு முற்றிலும் புதிதாக இருக்கும் இந்த காட்சிகள் என்கிறார்கள் படத்தில் பணியாற்றுகிறவர்கள்.