Publish Date: Fri, 06 Feb 2009 (15:17 IST)
Updated Date: Fri, 06 Feb 2009 (15:16 IST)
சரத்குமார் அப்பா, மகனாக இரு வேடங்களில் நடித்தப் படங்கள் பெரும்பாலும் தோல்வியடைந்தது இல்லை.
விரைவில் வெளிவரயிருக்கும் 1977 படத்தில் சரத் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடித்துள்ளார். கே.எஸ். ரவிக்குமாரின் ஜக்குபாயிலும் ஸ்ரேயாவுக்கு அப்பாக நடித்துள்ளார். இதில் அப்பா மட்டும்தான். மகன் கிடையாது.
வஸாபி படத்தின் தழுவலான ஜக்குபாயில் வஸாபி ஹீரோ ரெனேயின் அதே கெட்டப்பில் வருகிறார் சரத். படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்டுள்ளது. பேட்ச் வொர்க் மட்டுமே சென்னையில்.
ரஃபி என்ற சிங்கப்பூர் இளைஞர் படத்துக்கு இசையமைத்துள்ளார். இவர் ஏ.ஆர். ரஹ்மானிடம் உதவியாளராக இருந்தவர்.
வரயிருக்கும் இரண்டு படங்களிலும் அப்பா வேஷம் போட்டிருப்பதால் பாக்ஸ் ஆபிஸில் இரு படங்களும் தப்பாமல் ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் சரத்.