அலிபாபா படம் வெளிவரும் முன்பே அதில் நடித்த கிருஷ்ணா தொட்டுப்பார் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது.
அறிவித்தபடி தொட்டுப்பார் படப்பிடிப்பு சில நாட்கள் முன் தொடங்கியது. ஆனால், கிருஷ்ணா நடிக்கவில்லை. அவருக்குப் பதில நடித்தவர் விதோர் என்ற புதுமுகம்.
ஜி.டி. நந்து இயக்கும் இந்தப் படத்திலிருந்து கடைசி நிமிடத்தில் கிருஷ்ணா மாற்றப்பட்டு விதோர் சேர்க்கப்பட்டிருக்கிறார். மாற்றத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக்கப்படவில்லை.
தொட்டுப்பார் படத்தை கிருஷ்ணாவின் தந்தை பட்டியல் சேகர் தயாரிக்கிறார். தந்தையின் படத்திலிருந்து மகன் திடீரென்று தூக்கப்பட்டது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தொட்டுப்பாரில் தற்போது நடித்துவரும் விதோர் கூத்துப்பட்டறை நாடக கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.