கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ஆதவன் படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது.
சூர்யா ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். இது இரண்டு நாள் முன்பு வரை உறுதி செய்யப்பட்ட தகவல். ஆனால் இப்போது...?
பையா படத்துக்கு வாங்கிய அட்வான்ஸை நயன்தாரா திருப்பிக் கொடுக்காததால் தமிழ்ப் படங்களில் நடிக்க அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிற மொழிப் படங்களில் அவர் நடிக்கவும் தடை விதிக்க தமிழ்நாடு தயாரிப்பாளர்கள் சங்கம் மும்முரமாக உள்ளது.
இந்நிலையில் இந்த மாதம் தொடங்கும் ஆதவனில் அவர் பங்கு பெறுவது கடினம். ஹீரோயினுக்காக காத்திருக்கும் நபரல்ல கே.எஸ். ரவிக்குமார் என்பதால் படத்திலிருந்து நயன்தாரா நீக்கப்படலாம் என்கிறார்கள்.
அதேநேரம், நான் செய்தது நியாயம்தான். எனக்கு நீதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் நயன்தாரா.
நயன்தாராவின் நீதி ஜெயிக்கிறதா என்பது ஆதவன் ஷூட்டிங் தொடங்கும்போது தெரிந்துவிடும்.