Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமதி காவ்யா மாதவன்

Advertiesment
திருமதி காவ்யா மாதவன்
, வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (14:48 IST)
காவ்யா மாதவன் நேற்று முதல், காவ்யா நிஷால் சந்திரன். கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் சுற்றமும் நட்பும் ூழ நிஷால் சந்திரனை நேற்று கரம்பற்றினார் காவ்யா மாதவன்.

மலையாள திரையுலகின் நாயகிகள் பட்டியலில் காவ்யா மாதவன்தான் சீனியர். பல மாதங்களாக இவரது திருமணச் செய்தி காஸிப்களாக வலம் வந்தபடி இருந்தது. இதனை காவ்யாவும் அவரது பெற்றோரும் மறுக்கவில்லை.

பெற்றோர் பார்க்கும் பையனை திருமணம் செய்வேன் என்று அப்போது கூறினார் காவ்யா மாதவன். சொன்ன சொல் தவறாதவர்... பெற்றோர் பார்த்த பையனையே திருமணம் செய்திருக்கிறார்.

மணமகன் நிஷால் சந்திரன் துபாயில் இன்‌ஜினியராக பணியாற்றுகிறார். நேற்று நடந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர்.

வரும் 9ம் தேதி கொச்சி லீ மெ‌ரிடியன் ஹhட்டலில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழ், மலையாளம் திரையுலகைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

கணவருடன் துபாய் செல்வதால் தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதில்லை என்று தெ‌ரிவித்தார் காவ்யா மாதவன் ாரி.. காவ்யா நிஷால் சந்திரன்.

Share this Story:

Follow Webdunia tamil