Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செல்வராகவன் பட‌ம் : விஷால் விலகல்

Advertiesment
செல்வராகவன் பட‌ம் : விஷால் விலகல்
, வெள்ளி, 6 பிப்ரவரி 2009 (13:52 IST)
செல்வராகவனின் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் விஷால்.

சபா அய்யப்பன் இயக்கத்தில் தோரணை படத்தில் தற்சமயம் விஷால் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடி, ஸ்ரேயா. தோரணை முடிந்ததும் செல்வராகவன் படத்தில் நடிப்பதாக இருந்தார் விஷால். அவருக்கு ஜோடியாக த்‌ரிஷநடிப்பதாக முடிவாகியிருந்தது. தயா‌ரிப்பது போக்கி‌ி படத்தை எடுத்த ரமேஷ்பாபு.

அனைத்தும் முடிவான நிலையில் செல்வராகவனின் படத்திலிருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்துள்ளார் விஷால். விலகலுக்கான காரணத்தை தெ‌ரிவிக்காதவர், தயா‌ரிப்பாளருடனோ, செல்வராகவனுடனோ எந்த மனஸ்தாபமும் இல்லை என்றும் தெ‌ரிவித்துள்ளார்.

செல்வராகவன் தற்போது தனுஷ், ஆண்ட்‌ரியா நடிக்கும் இது மாலை நேரத்து மயக்கம் படத்தை இயக்கி வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil