Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இலக்கணம் மீறும் ஆரண்ய காண்டம்

Advertiesment
இலக்கணம் மீறும் ஆரண்ய காண்டம்
, வியாழன், 5 பிப்ரவரி 2009 (19:53 IST)
வழக்கமான சினிமா இலக்கணத்தை மீறி இந்தப் படத்தை எடுத்து வருகிறோம் என்றார், அறிமுக இயக்குனர் குமாரராஜா. எந்தப் படம்? ஆரண்ய காண்டம்.

ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை இந்த காலத்துக்கு ஏற்றபடி எடுப்பதில் மணிரத்னத்தை அடிக்க ஆளில்லை. அவரின் தளபதி, ரோஜா படங்கள் இதிகாசங்களை தழுவி எடுக்கப்பட்டதே. தற்சமயம் படப்பிடிப்பில் இருக்கும் அசோகவனம் படமும் ராமாயணத்தின் ஒரு பகுதியை பின்னணியாகக் கொண்டே தயாராகி வருகிறது.

மணிரத்னத்துக்கு போட்டியாக கிளம்பியிருக்கிறார், அறிமுக இயக்குனர் குமாரராஜா. இவர் இயக்கும் ஆரண்ய காண்டமும் ராமாயணத்தை பின்னணியாகக் கொண்டே தயாராகி வருகிறது. ராமாயணத்தின் வனவாசப் பகுதியில் வரும் ஒரு குறிப்பிட்டப் பகுதியை இந்த காலத்துக்கு ஏற்றபடி எடுத்து வருகிறார், குமாரராஜா.

ஜாக்கி ஷெ­ராஃப் தாதாவாக இதில் நடிக்கிறார். எஸ்.பி.பி. சரண் படத்தை தயாரிக்கிறார். வழக்கமான சினிமா இலக்கணத்தை மீறி படத்தை எடுத்து வருகிறோம். இந்த வரம்பு மீறல் அனைவராலும் ரசிக்கப்படும். மேலும், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்‌ஷ‌ியல் படமும்கூட என படத்தைப் பற்றி பரபரப்பை பற்ற வைத்தார் குமாரராஜா.

வித்தியாசமாக இருந்தால் ரசிக்க நாங்களும் தயார்தான்.

Share this Story:

Follow Webdunia tamil