கந்தா, கனகவேல் காக்க, மலையன், அர்த்தநாரி படங்கள் கைவசம் வைத்திருக்கும் கரண் புதிதாக நடிக்கயிருக்கும் படம், தம்பி வெட்டோசி சுந்தரம்.
சாமிடா படத்தை இயக்கிய வடிவுடையான் கதை, திரைக்கதை எழுதி படத்தை இயக்குகிறார். சாமிடாவுக்குப் பிறகு ஸ்ரீகாந்த் நடிப்பில் நாஞ்சில் ஐந்தாம் திசை படத்தை வடிவுடையான் இயக்குவதாக இருந்தது.
மா, மாணவர் தினம், துரோகி படங்களுக்கு ஸ்ரீகாந்த் கால்ஷீட் கொடுத்துள்ளதால் வடிவுடையான் படம் தள்ளிப்போகும் நிலை. எனவே ஸ்ரீகாந்துக்குப் பதில் கரணை வைத்து தம்பி வெட்டோசி சுந்தரத்தை உடனே தொடங்குகிறார்.
நாஞ்சில் ஐந்தாம் திசையைதான் தம்பி வெட்டோசி சுந்தரம் என்ற பெயரில் இயக்குகிறார் என்பது முக்கியமான செய்தி. கரணுக்கு ஜோடியாக இதில் நடிகை சுமித்ராவின் மகள் நக்சத்ரா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.