இந்திப் படங்களில் பிஸியாக இருக்கிறார், மாதவன். புதிய தமிழ்ப் படங்கள் எதற்கும் அவர் கால்ஷீட் தரவில்லை. மாதவனை இதற்கு குற்றம் சொல்ல முடியாது.
அவரது நடிப்பில் குரு என் ஆளு, யாவரும் நலம் என இரு படங்கள் தயாராகி இன்னும் திரைக்கு வராமல் இழுத்துக் கொண்டே செல்கிறது. இதில் குரு என் ஆளு தீபாவளிக்கு முன்பே திரைக்கு வரவேண்டியது.
யாவரும் நலம் படத்தை விக்ரம் குமார் இயக்கியிருக்கிறார். சங்கர் எசன் லாய் இசை. ஒளிப்பதிவு பி.சி. ஸ்ரீராம். மாதவன் ஜோடியாக நீது சந்திரா நடித்துள்ளார்.
அபார்ட்மெண்ட் ஒன்றில் நடக்கும் கதை இது. படத்தில் தொலைக்காட்சி சீரியல் ஒன்று இடம்பெறுகிறது. தொடரின் பெயரான யாவரும் நலத்தையே படத்துக்கு வைத்துள்ளனர்.
பதிமூன்றாவது மாடியில் உள்ள 13பி பிளாட்டில் நடக்கும் சம்பவங்கள் என்பதால் படத்தின் இந்திப் பதிப்புக்கு 13பி என பெயர் வைத்துள்ளனர். படம் தமிழ், இந்தி இரு மொழிகளிலும் வெளியாகிறது.
மார்ச் 6ம் தேதி படம் திரைக்கு வருகிறது. படத்தின் பெயர் 13பி-யில் யாவரும் நலம் என மாற்றப்படலாம்.