Publish Date: Tue, 03 Feb 2009 (17:05 IST)
Updated Date: Tue, 03 Feb 2009 (17:04 IST)
கோடை விடுமுறையில் ரஜினியின் சுல்தான் தி வாரியர் அனிமேஷன் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி தனது ஆக்கர் ஸ்டுடியோ சார்பில் தயாரித்து இயக்கிவரும் படம், சுல்தான் தி வாரியர். ஏறக்குறைய அறுபது கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தில் ஆட்லேப்ஸ் இணை தயாரிப்பாளராக உள்ளது.
இந்திய நடிகர் ஒருவரை வைத்து தயாராகும் முதல் அனிமேஷன் படம் எனற பெருமையும் இந்தப் படத்துக்கு உண்டு. விஜயலட்சுமி ரஜினியின் ஜோடியாக நடித்துள்ளார்.
ஐந்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் வேலைகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டன. படத்தை கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
படத்தில் பாடல்களும் உண்டு. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். கலை இயக்கம் தோட்டாதரணி.