திமிரு, காளை படங்களில் அசோஸியேட்டாக பணிபுரிந்த அழகன் இயக்கும் படம், செய். இவர், மேற்சொன்ன படங்களின் இயக்குனர் தருண்கோபியின் சகோதரர்.
காளை படத்துக்குப் பிறகு சொந்த படநிறுவனமான மதுரா டாக்கீஸ் தயாரிப்பில் காட்டுப்பய படத்தை இயக்கி நடிப்பதாக இருந்தார், தருண்கோபி. அதற்குள் அவரது கதவை தட்டியது மாயாண்டி குடும்பத்தார் படவாய்ப்பு. மேலும், காட்டுப்பய படத்தை கவிதாலயா தயாரிக்க முன்வந்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மதுரா டாக்கீஸ் தயாரிப்பதாக இருந்த படம் கவிதாலயாவுக்கு சென்றதால், தருண்கோபியின் சகோதரர் அழகன் இயக்கும் முதல் படத்தை மதுரா டாக்கீஸ் தயாரிக்கிறது. படத்துக்கு செய் என்று பெயர் வைத்துள்ளனர். நடிகர்கள், டெக்னிஷியன்கள் யார் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.