Publish Date: Fri, 30 Jan 2009 (16:00 IST)
Updated Date: Fri, 30 Jan 2009 (15:59 IST)
ஆசை ஆசையாய் படத்துக்குப் பிறகு நடிகராக ரூட் மாறிய இயக்குனர் ரவிமரியா மீண்டும் இயக்குனர் ட்ராக்குக்கு திரும்பியிருக்கிறார்.
மாயாண்டி குடும்பத்தார், மாத்தியோசி படங்களில் நடித்து வருகிறார் நட்ராஜ். தருண்கோபி ஹீரோவாக நடிக்கயிருக்கும் காட்டுப்பய படத்திலும் இவருக்கு வேஷம் இருக்கிறது. இதற்கு நடுவில் நாளை, சக்கரவியூகம் படங்களின் ஹீரோ, நட்ராஜ் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.
மாயாண்டி குடும்பத்தாரில் நடித்துக் கொண்டே இயக்கப் போகும் படத்தின் கதை விவாதத்தை நடத்தி வருகிறார். நட்ராஜுக்கு ஜோடியாக அனேகமாக பாவனா நடிக்கலாம்.