Publish Date: Thu, 29 Jan 2009 (15:51 IST)
Updated Date: Thu, 29 Jan 2009 (15:50 IST)
திமிரு, காளை படங்களை இயக்கிய தருண்கோபிக்கும் ஹீரோ ஆசை. சொந்த தயாரிப்பில் காட்டுப்பய படத்திற்கான வேலைகளை சில மாதங்கள் முன் தொடங்கினார்.
ராசுமதுரவன் பத்து இயக்குனர்களை வைத்து இயக்கிவரும் மாயாண்டி குடும்பத்தாரில் இவர்தான் நாயகன். காதல், டூயட் எல்லாம் உண்டு. வத்தலகுண்டில் மாயாண்டி குடும்பத்தார் படப்பிடிப்புக்காக தங்கியிருக்கும் தருண்கோபி, அந்தப் படம் முடிந்ததும் காட்டுப்பயலில் நடிக்கிறார்.
படத்தில் ஒரேயொரு மாற்றம். தருண்கோபிக்குப் பதில் படத்தை கவிதாலயா தயாரிக்கிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மாயாண்டி முடும்பத்தார், காட்டுப்பய இரண்டும் வெற்றி பெற்றால் தொடர்ந்து ஹீரோவாக நடிப்பது என முடிவு செய்துள்ளார் தருண்.