Publish Date: Thu, 29 Jan 2009 (15:28 IST)
Updated Date: Thu, 29 Jan 2009 (15:27 IST)
1974ல் பாலசந்தர் இயக்கிய படம், நான் அவனில்லை. 31 வருடங்களுக்குப் பிறகும் படத்தின் சுவாரஸியம் குறையவில்லை என்பதால், நான் அவனில்லை மீண்டும் ரீமேக் செய்யப்பட்டது. செல்வா படத்தை இயக்கினார். படம் சூப்பர் ஹிட்.
இப்போது நான் அவன் இல்லையின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. ஹீரோ ஜீவன், இயக்குனர் செல்வா, தயாரிப்பாளர் இத்தேஷ் ஜெபக், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி என அதே டீம். நாயகிகள் மட்டும் மாறுகிறார்கள்.
படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளனர். நாயகிகள் தேர்வு நடந்து வருகிறது.