Publish Date: Thu, 29 Jan 2009 (15:25 IST)
Updated Date: Thu, 29 Jan 2009 (15:25 IST)
வீரத் தளபதி, வாழும் வள்ளல் அடைமொழியுடன் உலாவரும் ஜே.கே. ரித்தீஷை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அவரது நாயகன் நூற்றைம்பது நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவரது எதிரிகள் கிளப்பிவிடும் வதந்தி.
வெள்ளிவிழா படம் கொடுத்தவர் ஏன் அடுத்தப் படத்தை தொடங்காமல் இருக்கிறார் என்பது அனைவரின் மண்டையையும் குடையும் கேள்வி. அடுத்தப் படத்தில் நடிக்கும்முன் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுக்கிறார் ரித்தீஷ்.
கலைஞர் தொலைக்காட்சிக்காக ஆண்டாள் என்ற மெகா தொடர் தயாராகிறது. மீனா தொடரின் நாயகி. தொடரை ரித்தீஷ் தயாரிக்கிறார்.
வெள்ளித்திரையில் ரித்தீஷின் அடுத்த அவதாரம், வேட்டைப்புலி. ஆமாம், இதுதான் அவர் நடிக்கப் போகும் படத்தின் பெயர். புலிக்கு போட்டீங்களாண்ணா?