Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓட்டுனர் தமன்னா

Advertiesment
தமன்னா தமிழ் சினிமா பையா லிங்குசாமி கார்
, வியாழன், 29 ஜனவரி 2009 (15:23 IST)
சின்சியர் சிகாமணி ஆகியிருக்கிறார் தமன்னா. தமிழ் சினிமாவில் இப்போது இவர்தான் கனவுக் கன்னி. நயன்தாரா விட்டுச் சென்ற இடத்தை நிரப்புவதென்றால் சும்மாவா.

விஷயத்துக்கு வருவோம். படிக்காதவன், அயன் படங்கள் முடிந்த நிலையில் லிங்குசாமியின் பையாவுக்கு தயாராகி வருகிறது இந்த பாப்பா. படத்தில் தமன்னா கார் ஓட்டும் காட்சி வருகிறதாம். தமன்னாவுக்கோ கார் ஓட்டத் தெ‌ரியாது. ஒரு காட்சி என்றால் சமாளிக்கலாம். ஊர்பட்ட காட்சிகள் இருந்தால்?

டிரைவிங் படித்தால்தான் ஆயிற்று என்று கறாராக கூறியிருக்கிறார் லிங்குசாமி. இயக்குனர் கட்டளை, மீற முடியுமா. மும்பையில் தனது தந்தையின் மேற்பார்வையில் தற்போது கார் ஓட்ட கற்று வருகிறார் தமன்னா.

நல்லவேளை இப்போதெல்லாம் ச‌ரித்திரப் படங்கள் வருவதில்லை. காருக்குப் பதில் தேரோட்டுவது எவ்வளவு சிரமம்.

Share this Story:

Follow Webdunia tamil