Publish Date: Wed, 28 Jan 2009 (13:56 IST)
Updated Date: Wed, 28 Jan 2009 (13:56 IST)
நான் கடவுள் படம் ஆடியோ ரிலீஸுக்குப் பிறகும் தனது மர்மத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி குறித்து கோடம்பாக்கத்தில் குட்டி பட்டிமன்றமே நடந்து வருகிறது.
இம்மாதம் 29 அல்லது 30ம் தேதி படம் திரைக்கு வந்துவிடும் என படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். ஆனால், இந்த தேதிகளில் படம் திரைக்கு வருவது சந்தேகம் என்கின்றன தகவல்கள்.
அப்படியானால் படம் எப்போது வெளிவரும்?
பிப்ரவரி 5ம் தேதி நான் கடவுள் திரைக்குவரும் என படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் தெரிவித்துள்ளார். கேள்வி ஒன்றுக்கு தனது ப்ளாக்கில் பதிலளித்த ஜெயமோகன், பிப். 5 நான் கடவுள் திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
பாலாவின் படம்... கண்டிப்பாக கடைசிநேர மாறுதலுக்கு உள்பட்டது.