தெலுங்கில் வெளியாகிறது அபியும் நானும். ரீமேக் அல்ல.. டப்பிங்.
த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா அனைவரும் ஆந்திரா ரசிகர்களுக்கு அறிமுகமானவர்கள். தெலுங்கு ஹீரோ ஒருவரும் படத்தில் இருந்தால் நேரடி தெலுங்குப் படத்தைப் போல் அபியும் நானும் படத்தை வெளியிடலாம். அதற்கான வேலைகள் நடக்கயிருக்கின்றன.
பிருத்விராஜ் நடித்த காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட உள்ளன. அவருக்குப் பதில் ஜெகபதி பாபு அந்த வேடத்தில் நடிக்க உள்ளார். இதற்காக த்ரிஷாவிடம் மூன்று நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது.
ஊட்டியில் அந்தக் காட்சிகள் படமாக உள்ளன.