Publish Date: Tue, 27 Jan 2009 (15:59 IST)
Updated Date: Tue, 27 Jan 2009 (15:59 IST)
நல்ல சினிமா மீது எல்லோருக்கும் ஆசை. ஆனால், ஆசைக்காக காசை விட்டுக் கொடுக்கதான் யாருமில்லை. ஆர்யா விதிவிலக்கு. விரைவில் மலையாளப் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மலையாளத்தில் வந்தாலும் நம்மூர் ஹீரோக்களுக்கு அங்குபோய் நடிக்க தயக்கம். சரக்கு லாரியில் சம்பளம் வாங்குகிறவர்களை சுருக்கு பை கொண்டு வாருங்கள் என்றால் தயங்கத்தானே செய்வார்கள்? மாலிவுட்டில் சூப்பர் ஸ்டார்களுக்கே சம்பளம் லட்சத்தில்தான்.
நேரடி தமிழ்ப் படங்களில் நடிக்காமல், அவற்றின் ரீமேக்கில் நம்மூர் ஹீரோக்கள் நடிக்க இதுதான் காரணம். விதிவிலக்காக நேரடி மலையாளப் படமொன்றில் ஆர்யா நடிக்கயிருக்கிறார். ஆர்யாவுடன் மோகன்லாலும் நடிக்கிறார் என்பது மற்றொரு சர்ப்ரைஸ்.
ரோஷன் ஆண்ட்ரூ இயக்கும் இந்தப் படத்துக்கு கேஸினோ என பெயர் வைத்துள்ளனர்.