Publish Date: Sat, 24 Jan 2009 (16:05 IST)
Updated Date: Sat, 24 Jan 2009 (16:05 IST)
தனது சகோதரர் ஏவிஎம் சரவணனிடமிருந்து பிரிந்து வந்து தனியாக படம் தயாரிக்கிறார், ஏவிஎம் பாலசுப்ரமணியம். இவரது தயாரிப்பில் வரும் முதல் படம், வேட்டைக்காரன்.
விஜய் நடிக்கும் இந்தப் படத்தை தரணியின் அசிஸ்டெண்ட் பாபுசிவன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி இசை. அனுஷ்கா ஹீரோயின். பழைய வேட்டைக்காரனுக்கும் இதற்கும் கதை ரிதியாக எந்த ஒற்றுமையும் இல்லை.
வேட்டைக்காரனைத் தொடர்ந்து ஏவிஎம் தயாரித்த புகழ்பெற்ற படங்களை ரிமேக் செய்ய இருப்பதாக தெரிவித்தார், பாலசுப்ரமணியம். நல்லவனுக்கு நல்லவன், சகலகலாவல்லவன், அன்பே வா ஆகிய படங்கள் அவரது ரீமேக் லிஸ்டில் இடம்பிடித்துள்ளன.