தியாகராஜனின் மறக்க முடியாத திரைப்படம், 1983ல் வெளியான மலையூர் மம்பட்டியான். அதே கதையை மம்பட்டியான் என்ற பெயரில் தனது மகன் பிரசாந்தை வைத்து இயக்கி வருகிறார், தியாகராஜன்.
சரிதா நடித்த வேடத்தில் மீராஜாஸ்மினும், ஜெயமாலினி நடித்த வேடத்தில் மூமைத்கானும் நடிக்கின்றனர். தியாகராஜன் நடித்த மம்பட்டியான வேடத்தில் பிரசாந்த்.
மலையூர் மம்பட்டியான் படம், மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்ற மனிதனின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும். அதனால் தற்போது தயாராகிவரும் மம்பட்டியானை அதே மலையூர் கிராமத்தில் எடுத்து வருகிறார், தியாகராஜன்.
ரீமேக் என்று சொல்ல முடியாத அளவுக்கு இந்த காலத்திற்கு ஏற்ப படத்தில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.