Publish Date: Sat, 24 Jan 2009 (15:58 IST)
Updated Date: Sat, 24 Jan 2009 (15:58 IST)
பொல்லாதவன் படத்தை உருவாக்கிய அதே டீம் மீண்டும் ஒன்றிணைகிறது. தயாரிப்பாளர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், ஹீரோ... எதிலும் மாற்றமில்லை. ஒரேயொரு மாற்றம் ஹீரோயின்.
திவ்யா ஸ்பந்தனாவுக்குப் பதில் ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்தனர். ஆனால், குறித்த நேரத்தில் படப்பிடிப்பை தொடங்காமல் என்னுடைய கால்ஷீட்டை வீணடித்துவிட்டனர் என்று கூறி, வாங்கிய அட்வான்ஸை திருப்பிக் கொடுத்தார் ஸ்ரேயா.
இப்போது அவருக்குப் பதில் த்ரிஷா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சர்வம் படத்தில் நடித்துவரும் த்ரிஷா, தெலுங்கில் கோபிசந்த் ஜோடியாக நடிக்கிறார்.
தமிழைப் பொறுத்தவரை சர்வம், சென்னையில் ஒரு மழைக்காலம் படங்களை தவிர்த்து ஒரேயொரு படம்தான் த்ரிஷா கைவசம் உள்ளது. செல்வராகவன் இயக்கும் படம். இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார்.
வெற்றிமாறனின் படம் சாpத்திர பின்னணியில் தயாராக உள்ளது. மதுரையில் நடக்கும் கதை என்பதால் தனது அலுவலகத்தை மதுரைக்கு ஷிப்ட் செய்திருக்கிறார் வெற்றிமாறன்.