Publish Date: Sat, 24 Jan 2009 (15:57 IST)
Updated Date: Sat, 24 Jan 2009 (15:56 IST)
தெலுங்கில் சரித்திரம் படைத்த படங்களில் ஒன்று பாலசந்தரின் மரோசுரித்ரா. கமல் நடித்த இந்தப் படம் அங்கு வெள்ளிவிழா கொண்டாடியது.
தற்போது மரோசரித்ராவை தெலுங்கில் ரீமேக் செய்து வருகிறார்கள். இந்த காலகட்டத்திற்கு ஏற்ப படத்தில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டிருப்பதாக ஆந்திராவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
சில அதிசயங்களை நகல் எடுக்க முடியாது. முடியாது என்பதைவிட கூடாது. மரோசரித்ரா விஷயத்தில் அதனை மீறியிருக்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும்.