Publish Date: Sat, 24 Jan 2009 (15:57 IST)
Updated Date: Sat, 24 Jan 2009 (15:55 IST)
நேற்று இந்தியா முழுவதும் வெளியானது, ஸ்லம்டாக் மில்லியனர் திரைப்படம். மும்பையை பின்னணியாகக் கொண்ட படம் என்றாலும் இதுவொரு ஆங்கிலப் படம்.
இதனை இந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்து வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன. இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஸ்லம்டாக் மில்லியனர் விரைவில் வெளிவர உள்ளது.
தமிழ் மொழிமாற்று உரிமை ஏறக்குறைய 75 லட்சங்கள் கொடுத்து வாங்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் படத்துக்கு இசையமைத்திருப்பதும், கோல்டன் குளோப் விருது பெற்றதுமே இந்த மிக்பபெரிய வியாபாரத்துக்கு காரணம்.
தமிழில் இப்படத்துக்கு நானும் கோடீஸ்வரன் என பெயர் வைத்துள்ளனர். பிப்ரவரி 6ம் தேதி படத்தை திரையிட முயற்சிகள் நடந்து வருகிறது.