கற்றது தமிழ் அஞ்சலிக்கு கிடைத்த, கிடைக்கிற அனைத்து வேடங்களும் நாலுமுழ தாவணியாக இருப்பதில் ரொம்ப வருத்தம். கிராமத்து பெண்ணாக எத்தனை படங்களிலதான் நடிப்பது? புலம்பிக் கொண்டிருந்தவருக்கு புதையலாக கிடைத்திருக்கிறது மகாராஜா படவாய்ப்பு.
அர்ஜுனிடம் அசிஸ்டெண்டாக இருந்த டி. மனோகரன் இயக்கும் படம், மகாராஜா. வள்ளுவன் வாசுகி படத்தில் அறிமுகமான சத்யா ஹீரோ. படத்தின் இன்னொரு ஹீரோ நாசர். நாம் சொல்லவில்லை.. இயக்குனரே தெரிவித்த தகவல் இது.
இந்தப் படத்தில் அஞ்சலிக்கு அவர் ஆசைப்பட்ட மாடர்ன் கேர்ள் வேடமாம். கண்டபடி காஸ்ட்யூம் அணியலாம் என இயக்குனரே சொல்லிவிட்டதில் அம்மணிக்கு ஏக குஷி. படத்தின் பூஜை அன்று கலர்ஃபுல் மாடன் உடையில் ஏரியாவை கலகலக்க வைத்தார்.
மகாராஜா அஞ்சலியின் மாடர்ன் ஆசைக்கு போடப்பட்டிருக்கும் ராஜபாட்டை.