பிரசன்னா, சந்தியா, பாலா நடிப்பில் உருவான படம், மஞ்சள் வெயில். படம் தயாராகி பல மாதங்கள் ஆகிறது. பாடல்களும் பல மாதங்களுக்கு முன்பே வெளியாகி விட்டது. ஆனால், படம்தான் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.
சென்ற வருடத்தில் மட்டும் இரண்டு மூன்று ரிலீஸ் தேதிகளை அறிவித்தனர். துரதிர்ஷ்டவசமாக அந்த தேதிகளில் படம் திரைக்கு வரவில்லை. பட வியாபாரத்தில் சில சிக்கல்கள்.
இப்போது பிரச்சனைகள் அனைத்தும் முடிந்த நிலையில் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தன்று படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.
பொதுவாக ஒரு படம் தாமதமானால் படத்தின் பெயரை மாற்றுவார்கள். புதிய படம் என ரசிகர்கள் நம்புவதற்காக. மஞ்சள் வெயிலில் இயக்குனர் பெயரை மாற்றியிருக்கிறார். படம் முடியும் வரை ராஜாவாக இருந்தவர் இப்போது மித்ரன் என பெயரை மாற்றி வைத்துள்ளார்.
மாற்றம் ஏற்றம் தரட்டும்.