Publish Date: Thu, 22 Jan 2009 (15:20 IST)
Updated Date: Thu, 22 Jan 2009 (15:19 IST)
படப்பிடிப்பில் நடிகர்களின் பெண்டை நிமிர்த்தும் இமயம், சிகரம் இருவரையும் ஒரே நேரத்தில் வேலை வாங்கும் தாமிராவைப் பற்றிதான் இப்போது இன்டஸ்ட்ரியில் பேச்சு.
இமயம் பாரதிராஜாவும், சிகரம் பாலசந்தரும் இணைந்து நடிக்கும் ரெட்டச்சுழி படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் இரண்டாம்கட்ட படப்பிடிப்புக்காக வரும் 26 ஆம் தேதி மீண்டும் நெல்லை செல்கிறது ரெட்டச்சுழி யூனிட். மொத்த படப்பிடிப்பையும் நெல்லையில் நடத்த முடிவு செய்துள்ளார் இயக்குனர் தாமிரா.
பாரதிராஜா, பாலசந்தர் இருவரும் இணைந்து நடிக்கும் அபூர்வப் படம் என்பதால் கோடம்பாக்க இயக்குனர்கள் அந்த கண்கொள்ளா காட்சியை காண நெல்லை செல்ல திட்டமிட்டுள்ளனர்.
ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார்.