Publish Date: Thu, 22 Jan 2009 (15:17 IST)
Updated Date: Thu, 22 Jan 2009 (15:17 IST)
சுந்தர் சி.யிடம் பத்துப் படங்களுக்கு மேல் அசிஸ்டெண்டாக பணிபுரிந்தவர் ஸ்ரீஹரி. இவர் இயக்கும் முதல் படம், கார்த்திக் அனிதா.
புதுமுகங்கள் மஞ்சு, ரத்தன் நடிக்கும் இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. காதல் கதையான இது வழக்கமான சினிமா காதலாக இருக்காது என உத்தரவாதம் தருகிறார் இயக்குனர் ஸ்ரீஹரி.
கார்த்திக் அனிதாவுக்கு அறிமுக இசையமைப்பாளர் ஜாக் ஆனந்த் இசையமைத்துள்ளார். வரும் 28 ஆம் தேதி பாடல்களை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது.