காத்திருந்து கண் பூத்துவிட்டது. ஆடியோ வெளிவந்த பிறகும் கடவுளை கண்ணில் காட்ட மாட்டேன் என்கிறார் பாலா.
படம் எப்போது ரிலீஸ் என்று நேரடியாக அவரிடம் கேட்கலாம் என்றால் கடவுளைப் போலவே ஆள் எப்போதும் மாயம். போஸ்ட் புரொடக்சன் வேலையில் அண்ணன் பிஸி என்கிறார்கள் தம்பிகள்.
சரி, நாம்தான் ரிலீஸ் தேதியை ஆராய்ந்து அறிந்தாக வேண்டும் என்ற முடிவில் முடுக்கி விட்டோம் நமது ஆராய்ச்சியை.
பல நாட்கள்.. பல நபர்கள்.. கடைசியாக நமக்கு கிடைத்த தகவல், இம்மாதம் 29ம் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 29 தாண்டினால் 30.
கடவுளின் விஷயம், கடைசி நிமிடத்தில் மாறினாலும் மாறக்கூடும்.